Enable Javscript for better performance
சிறுபான்மையினர் வாக்குகளைக் கவரவே  கர்நாடகத்தில் திருமண உதவித் திட்டம் அமல்:  எடியூரப்பா குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    சிறுபான்மையினர் வாக்குகளைக் கவரவே  கர்நாடகத்தில் திருமண உதவித் திட்டம் அமல்:  எடியூரப்பா குற்றச்சாட்டு

    By  பெங்களூரு  |   Published on : 05th November 2013 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவருவதற்காகவே திருமண உதவித் திட்டத்தை ( ஷாதிபாக்யா திட்டம்) கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமல்படுத்தியுள்ளதாக, அந்த மாநில முன்னாள் முதல்வரும், கஜக தலைவருமான எடியூரப்பா குற்றம்சுமத்தினார்.
     கர்நாடகத்தில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அனைத்து சமுதாய ஏழைப் பெண்களுக்கும் விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி முதல் பெங்களூரு, ஆனந்த்ராவ் சதுக்கம், காந்தி சிலை அருகே தனது கட்சித் தொண்டர்களுடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
     திங்கள்கிழமை 5-ஆவது நாளாக நீடித்த போராட்டத்தில் கலந்து கொண்ட எடியூரப்பா, செய்தியாளர்களிடம் கூறியது: சிறுபான்மையினருக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஷாதிபாக்யா (திருமண நிதியுதவி) திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதை அனைத்து சமுதாயத்தினருக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
     நவம்பர் 24-ஆம் தேதி அன்று பெல்காமில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது. எனது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால், நவம்பர் 24-ஆம் தேதி வரை தொடர்ந்து தர்னா போராட்டம் நடத்தப்படும். ஏழைப் பெண்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கிறார்கள். ஆனால், அரசு சிறுபான்மையினப் பெண்களுக்கு மட்டும் ஷாதிபாக்யா திட்டத்தை அறிவித்துள்ளது.
     சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவருவதற்காக காங்கிரஸ் அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. முதல்வர் சித்தராமையா இதில் நூறு சதம் அரசியல் செய்து வருகிறார். பிபிஎல் குடும்ப அட்டைகள் போல், ஏபிஎல் குடும்ப அட்டைகளுக்கும் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
     இரண்டொரு நாளில் எனது தர்னா போராட்டத்திற்கு காங்கிரûஸ தவிர்த்து, மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று நம்புகிறேன். ஆனால், நான் எந்தக் கட்சியிடமும் ஆதரவு கோர மாட்டேன் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai