சுடச்சுட

    

    நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு:  முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக்

    By  பெங்களூரு  |   Published on : 05th November 2013 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்
     பட்டு வருகிறது என்று முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தெரிவித்தார்.
     பெங்களூரு அரண்மனை மைதானத்தில் திங்கள்கிழமை நவ. 17-ஆம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாநகரப் போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கருடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
     பிகார் மாநிலம் பாட்னாவில் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் தொடர் குண்டு வெடித்ததையடுத்து, பெங்களூருவில் அவர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு போலீஸôர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். நாட்டின் பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு எந்த வகையில் பாதுகாப்பு அளிக்கப்படுமோ அந்த வகையில் நரேந்திரமோடியின் பொதுக் கூட்டத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநகர போலீஸ் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் தெரிவித்தார். பாதுகாப்பிற்கு மத்தியிலிருந்து ஒரு குழுவும், குஜாராத் மாநிலத்திலிருந்து ஒரு குழுவும் பெங்களூருக்கு வரவழைக்கப்படுகிறது. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அனைவரும் தீவிரப் பரிசோதனைக்கு பிறகே கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai