சுடச்சுட

  

  "பல்வேறு சமுதாயத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது காங்கிரஸ்'

  By  மைசூர்,  |   Published on : 05th November 2013 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு சமுதாய மக்களிடையே காங்கிரஸ் கட்சி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று முன்னாள் அமைச்சர் இ.ராமதாஸ் தெரிவித்தார்.
   மைசூரில் திங்கள்கிழமை பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:
   காங்கிரஸ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றிப் பெற வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறது.
   அதிலும், சமூகத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் பல்வேறு சமுதாய மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திப் பயனடையப் பார்க்கிறது.
   குறிப்பாக உயர்ந்த குடிமக்களிடம், பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
   முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டத்தில் உள்ள மைசூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
   தோல்வி அடைந்தால் முதல்வர் சித்தராமையாவின் பதவி ஆட்டம் காணத் தொடங்கும். எனவே வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சியிலும் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸின் சதிகளை முறியடிக்கும் வகையில் பாஜக பிற்படுத்தபட்டோர் அணி சிறப்பாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
   மற்றக் கட்சிகளில் பிரதமர் வேட்பாளர்களாக சிலர் வலுக் கட்டாயமாக நுழைக்கப்படுகின்றனர்.
   ஆனால், பாஜகவில் நரேந்திரமோடி அனைவரின் ஒப்புதலுடன் பிரதமர் வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai