சுடச்சுட

    

    பெங்களூரு  தொழில் அதிபரிடம்  ரூ. 1.14 கோடி பறிமுதல்

    By  பெங்களூரு  |   Published on : 05th November 2013 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றதாக, பெங்களூருவில் உள்ள தொழிலதிபரிடம் இருந்து ரூ. 1.14 கோடியை தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
     இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஷான்டிமேடே கைது செய்யப்பட்டு மணிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
     அவரிடம் ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்ய பெங்களூரு தொழில் அதிபர் ஒருவர் பணம் பெற்றதாக அவர் அளித்த தகவலின் பேரில், திங்கள்கிழமை பெங்களூரு வந்த தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், பெங்களூரு போலீஸாரின் உதவியுடன் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ. 1.14 கோடியை பறிமுதல் செய்தனர்.
     இது மட்டுமல்லாமல் அவரது அசையும், அசையாச் சொத்துகளின் ஆவணங்களையும் தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai