சுடச்சுட

    

    பெயின்ட் கடையில் தீ விபத்து:  பல லட்சம் ரூபாய் பொருள்கள் நாசம்

    By பெங்களூரு,  |   Published on : 05th November 2013 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெயின்ட் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
     பெங்களூரு பசவேஸ்வர் நகர் சங்கரமடம் அருகே உள்ள மன்சுக்லாலுக்கு சொந்தமான பெயின்ட் விற்பனை செய்யும் கடையில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
     தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சுமார் 15 தீயணைப்பு வாகனங்களில் வந்து 3 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
     இந்த தீ விபத்தால், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெயின்ட் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
     தீபாவளியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெயின்ட் கடையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டதாம்.
     அப்போது அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கை கடை உரிமையாளர்கள் அணைக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
     இதனால், கடையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பசவேஸ்வர நகர் போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai