சுடச்சுட

    

    எடியூரப்பாவின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது கடினம்: முதல்வர் சித்தராமையா

    By dn  |   Published on : 06th November 2013 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது கடினம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஏழை முஸ்லீம் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவி அளிக்கும் திட்டத்தை அனைத்து சமுதாய ஏழை பெண்களுக்கும் விரிவாக்கவலியுறுத்தி, கடந்த அக்.31-ஆம் தேதி முதல் பெங்களூரு, ஆனந்த்ராவ் சதுக்கம், காந்தி சிலை அருகே தனது கட்சிதொண்டர்களுடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தர்னா போராட்டத்தை தொடர்ந்து 6-வது நாளாக நடத்தி வருகிறார். அவர் தர்னா போராட்டம் நடத்தி வருகிறார் என்பதற்காக அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுவது கடினம். கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தோம். சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது எல்லாம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத எடியூரப்பா, தற்போது அரசியல் லாபத்திற்காக தர்னா போராட்டம் நடத்தி வருகிறார். நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தப்போது சுரங்க முறைகேட்டை விசாரிக்க வலியுறுத்தி விதானசௌதாவில் 5 நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா எங்களை கண்டு கொள்ளவில்லை. அவரது ஆதரவாளர்கள் எங்களை கேலி செய்து பிரியாணி சாப்பிட்டு, விதானசௌதாவை அசுத்தமாக்கினர். எனவே அவரிடமிருந்து எந்த பாடத்தை நாங்கள் கற்றுக் கொள்ளத்தேவையில்லை. ஜனநாயகத்தை எடியூரப்பாதான் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai