சுடச்சுட

  

  எதிர்க்கட்சித் தலைவருக்கு தகவல் தர அதிகாரிகள் மறுப்பு: எதிர்க்கட்சித்தலைவர் குமாரசாமி குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 06th November 2013 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவருக்கு தகவல் தர அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்று கர்நாடக எதிர்க்கட்சித்தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

  இது குறித்து அவர் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் சித்தராமையா, எதிர்கட்சித்தலைவருக்கு எந்த தகவலை தரக்கூடாது என்று உததரவிட்டுள்ளார். இதனை அதிகாரிகள் உறுதியாக கடைப்பிடித்து வருவதால் எனக்கு எந்த தகவலும் கிடைப்பதில்லை. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் முதல்வர் சித்தராமையாவின் இந்த நடவடிக்கை ஏற்க தக்கது அல்ல. அவர் மீது நான் அபாண்டமான குற்றச்சாட்டு கூறுவதாக யாரும் கருத வேண்டும். அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் நிரூபிக்கத்தயார். பெல்காமில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை எழுப்புவேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai