சுடச்சுட

  

  வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப்பொருள்கள், ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

  பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணா (24). இவர் நவ. 1-ம் தேதி குடும்பத்தினருடன் மும்பை சென்றுவிட்டு, திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பி வந்தாராம். அப்போது மர்மநபர்கள் யாரோ அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 66 கிராம் தங்கநகைகள், வெள்ளிப்பொருள்கள், ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் ராஜராஜேஸ்வரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிந்த போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai