சுடச்சுட

    

    தீபாவளி பண்டிகை: பட்டாசு வெடித்ததில் 150-க்கும் மேற்பட்டோருக்கு காயம்

    By dn  |   Published on : 06th November 2013 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுவெடித்ததில் 150-க்கும்மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    சர்வதேச அளவில் சுற்றுசுசுழலுக்கு மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு  தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கவேண்டாம் என்றும், ஒருவேளைவெடித்தால் பாதுகாப்பாக பட்டாசுகளை கையாளுமாறும் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் உள்ளிட்ட சுய உதவிக்குழுவினர் பொதுமக்களை எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் தீபாவளி, நோன்பு, பலிபாட்டமி உள்ளிட்ட 3 நாட்களும் பெங்களூருவில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடித்தனர். இதனால் மாநகரில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு கண்,கால்,கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. கண்களில் காயமடைந்தோர் மின்டோ மருத்துவமனையில் 30 பேரும், நாராயணாநேத்ராலயாவில் 40 பேரும், வாசன் கண் மருத்துவமனையில் 20 பேரும், சேகர் மருத்துவமனையில் 10 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மாநகரில் உள்ள பல்வேறு கண் மருத்துமனையிகளில் 150-க்கும் அதிமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேறு நபர்கள் வெடித்த பட்டாசுகள் கண்ணில் பட்டு 2 பேருக்கு ஒரு கண் பார்வையை இழக்க செய்துள்ளது. பட்டாசு வெடித்ததில் சதீஷ்(30), குஷல்குமார் (13) ஆகியோர் 2 கண்களிலும் பார்வை இழந்துள்ளனர். கர்நாடகத்தில் 3 நாட்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதால், பட்டாசுகளை வெடிக்கும்போது பலரின் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பட்டாசுகளை வெடிக்கும் போது, பாதுகாப்பாகவும், கண்ணாடி அணிந்துகொண்டு வெடிக்குமாறு அறிவுரையை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். என்றாலும் பலர் இதனை பொருட்படுத்தவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai