சுடச்சுட

  

  நடுத்தர விவசாயிகளுக்கு நோய் தாக்காத கலப்பின ஆடுகளை வழங்க முடிவு: அமைச்சர் ஜெயசந்திரா

  By dn  |   Published on : 06th November 2013 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் உள்ள நடுத்தர விவசாயிகளுக்கு நோய் தாக்காத கலப்பின ஆடுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கர்நாடக சட்டம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் டி.பி. ஜெயசந்திரா தெரிவித்தார்.

  பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சி ஊழியர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் அண்மைகாலமாக பரவி வரும் கோமாரி நோயினால் தாக்கப்பட்டு மாடுகள் இறந்து வருகின்றனர். மாநிலத்தில் தற்போது குளிர்ச்சியான சீதோஷணநிலை உள்ளது. இது கோமாரி நோய் தாக்குவதற்கும், பரவுவதற்கும் ஏற்ற காலமாகும். இந்த நோய்க்கு 4368 கிராமங்களில் உள்ள 41,391 கால்நடைகள் பாதிப்பிற்குள்ளானது. இதில் 6,292 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து எச்சரித்துக் கொண்ட மாநில அரசு எல்லா பகுதிகளுக்கு நோய் தடுப்பு மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இன்னும் 15 நாளில் 100 சதம் மருந்துகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கோமாரி நோய் பரவுவதும் தடுக்கப்படும். இறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும். இந்த நிலையில் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகளை வரவழைத்து வழங்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

  மேலும் மாநிலத்தில் வறட்சி பகுதியில் உள்ள நடுத்தர விவசாயிகளுக்கு நோய்கள் தாக்காத வகையில் உருவாக்கியுள்ள கலப்பின ஆடுகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஆடுகள் மகாராஸ்டிரா மாநிலத்தில் வளர்க்கப்படுகின்றன. அந்த கலப்பின ஆடுகளை கோமாரி உள்ளிட்ட எந்த நோய்களும் தாக்குவதில்லை. ஆண்டுக்கு 2 முதல் 3 குட்டிகளை ஈன்று எடுக்கின்றன. இதனால் வறட்சி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அதுபோன்ற ஆடுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும். இது குறித்து அம்மாநிலத்தில் கலப்பின ஆடுகளை வளர்க்கும் பண்ணையுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai