சுடச்சுட

    

    சாலையோர நடைப்பாதையின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த மென்பொறியாளர் உயிரிழந்துள்ளார்.

    பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சௌரவ் (25). இவர் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தாராம். திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஜெயநகர் சௌத் என்ட் சதுக்கத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரமிருந்த நடைப்பாதையின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சௌரவ், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார். இது குறித்து ஜெயநகர் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai