சுடச்சுட

    

    நரேந்திரமோடியின் கூட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு: முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக்

    By dn  |   Published on : 06th November 2013 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் நவ. 17-ல் நடைபெறும் நரேந்திரமோடியின் பொது கூட்டத்திற்கு மாநிலம் முழுவதிலிருந்து 14 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

    பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நரேந்திரமோடி கலந்து கொள்ளும் பொதுகூட்டத்திற்கான ஏற்பாடுகளை அரண்மனை மைதானத்தில் ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூருவில் நவ. 17-ம் தேதி பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் பேரணி, பொதுகூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பொது கூட்டத்திற்கு மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். எனவே மாநிலம் முழுவதிலிருந்தும் 14 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து ரயில்வேதுறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். பொது கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளதால், அவர்களுக்கு தேவையான உணவுகளை தயாரிக்க பெரிய அளவிலான 6 சமையல் அறைகள் தயார் செய்யப்படுகிறது. அதேபோல் 500 தாற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. குடிநீர் பாட்டில்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai