சுடச்சுட

    

    நரேந்திரமோடியின் பொதுகூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: முதல்வர் சித்தராமையா

    By dn  |   Published on : 06th November 2013 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பெங்களூருவில் கலந்து கொள்ளும் பேரணி, பொதுகூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை அரசினர் இல்லம் கிருஷ்ணாவில் அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: குஜராத் முதல்வரும், பாஜக கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி, நவ. 17-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவருக்கு தேவையான பலத்த பாதுகாப்பை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடகத்தில் அவர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அது கர்நாடக அரசிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். சில விஷமிகள் வேண்டுமென்றே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதற்கு எந்த வகையிலும் போலீஸார் இடம் தரக்கூடாது. நரேந்திரமோடியின் பொதுகூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். ஆலோசனைக்கூட்டத்தில் கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், டிஜிபி லால்ரொக்குமோ பச்சாவ், மாநகர காவல் சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையர் கமல்பந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai