Enable Javscript for better performance
நாளை சௌஜ்னயா கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்னா போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாளை சௌஜ்னயா கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்னா போராட்டம்

    By dn  |   Published on : 06th November 2013 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரி மாணவி சௌஜ்னயா கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி நவ.7-ம் தேதி மாநிலம் தழுவிய தர்னா போராட்டம் நடத்த 50-க்கும் மேற்பட்ட மகளிர் உள்ளிட்ட சங்க அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.

    இது குறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் வசுந்தராபூபதி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அண்மைகாலங்களில் சிபிஐ அமைப்பு பல்வேறு வழக்குகளை விசாரித்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அந்த அமைப்பின் மீது நம்பிக்கை துளிர்விட தொடங்கியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு அக். 9-ம் தேதி தென்கன்னட மாவட்டத்தில் கல்லூரி மாணவி சௌஜன்யா மர்மநபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் கருதி, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சௌஜன்யா கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி நவ. 7-ம் தேதி மாநில தழுவிய தர்னா போராட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மகளிர் சங்கங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட சங்க அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளன. அரசு உடனடியாக இதில் தலையிட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai