சுடச்சுட

  

  பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு தினசரி ரயில்விட கோரிக்கை

  By dn  |   Published on : 06th November 2013 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு தினசரி ரயில்விட பெங்களூருவில் உள்ள கன்னியாக்குமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

  இது குறித்து அச்சங்கத்தின் துணை தலைவர் ஜெயபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூருவில் தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு இரவில் செல்லும் வகையில் தினசரி எதுவும் இல்லை. பல்வேறு போராட்டத்திற்கு பின், 2010-ம் ஆண்டு பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மதுரை, ஈரோடு வழியாக பகலில் இயக்கப்படுகிறது. இதனால் பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரயிலால் பயன் இல்லை. இந்த நிலையில் பெங்களூரு-நாகர்கோவில் வாராந்திர ரயிலின் சேவையை நவம்பர் மாதத்துடன் நிறுத்த உள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்திற்கு பிறகு  கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினம், பொங்கல் பண்டிகைக்கு நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பலர் செல்ல உள்ள நிலையில், வாராந்திர ரயில் நிறுத்தப்பட உள்ளது. ஒருவேளை இந்த ரயில் நிறுத்தப்படுமானால், பொதுமக்கள் நலன் கருதி, பெங்களூருவிலிருந்து நாகர்கோவிலுக்கு தினசரி ரயிலை உடனடியாக இயக்க வேண்டும். இயக்கப்படும் தினசரி ரயில் பெங்களூரு புறநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்திச் செல்ல வேண்டும். நாகர்கோவிலிருந்து பெங்களுருக்கு காலை 9.05 மணியளவில் வந்தடையும் ரயிலின் நேரத்தை வேலைக்கு செல்வோர்களின் நலன் கருதி, காலை 7.30 மணியளவில் வந்தடையும் வகையில் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai