சுடச்சுட

    

    பெல்காமில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்ட மசோதா தாக்கல்: முதல்வர் சித்தராமையா

    By dn  |   Published on : 06th November 2013 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெல்காமில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    பெங்களூரு விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை மாயமந்திரம்,பில்லிசூனியம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் சட்ட வரைவு மசோதாவை முதல்வர் சித்தாராமையாவிடம் சட்ட அமைச்சர் டி.பி.ஜெயந்திரா அளித்தார். இதனை பெற்றுக் கொண்ட பின்னர் முதல்வர் பேசியது: சமூகத்தில் மூட நம்பிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மாயமந்திரம், பில்லிசூன்யம் என்ற மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி கொண்டு சிலர் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனை தடுக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதன் பயனாக தற்போது மூடநம்பிக்கை சட்ட வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நவ. 25-ம் தேதி பெல்காமில் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

    மூடநம்பிக்கைகளை போக்குவதற்காக பல்வேறு ஆன்மீகவாதிகள், சமூக சிந்தனையாளர்கள் பாடுபட்டனர். ஆனால் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியாத வகையில் சமூகத்தில் பரவலாக பரவியுள்ளது. இதனை தடுக்கும் விதத்தில் சட்ட மசோதாவை  தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவையில் இதன் சாதக, பாதகங்கள் பற்றி விவாதிக்கப்படும். மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டமசோதாவை தயாரிப்பதில் தேசிய சட்டப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சிந்தனையாளர்கள், ஆன்மீகவாதிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றார்.

    மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திரா செய்தியாளர்களிடம் கூறியது: மகாராஸ்டிரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக போராடி மூடநம்பிக்கை சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள்னர். தற்போது கர்நாடகத்தில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. கர்நாடகத்தில் 40 சதம் பேர் அதிக அளவு கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர். இதில் பெண்கள் அதிகம் பேர் உள்ளனர். இவர்களை மாயமந்திரம், தந்திரம், பில்லிசூன்யம் என்ற பெயரில் சிலர் ஏமாற்றி வருகின்றனர். மனிதர்களுக்கு கோவில், தெய்வம் என்ற நம்பிக்கை இருக்கலாம். ஆனால் மாயமந்திர, தந்திரம் என்ற மூடநம்பிக்கை இருக்கக் கூடாது. எனவே இதனை கருத்தில் கொண்டு, மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா, மாநில அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai