சுடச்சுட

  

  விதிகளை மீறும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் ராமலிங்கரெட்டி

  By dn  |   Published on : 06th November 2013 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விதிகளை மீறும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.

  பெங்களூரு சாந்திநகரில் செவ்வாய்க்கிழமை எரிபொருள் சேமிப்பு, சுற்றுச்சூழலை பாதிக்காத என்ஜின்களின் செயல்பாடுபற்றிய நிகழ்ச்சியில் தொடக்கி வைத்து அவர் பேசியது: ஆந்திர மாநிலத்தில் அண்மையில் தனியார் பேருந்து விபத்து ஏற்பட்டு தீக்கிரையானதில் அதிலிருந்த பெரும்பாலான பயணிகள் இறக்க நேரிட்டது. இதனையடுத்து கர்நாடக மாநிலம் முழுவதும் போக்குவரத்து துறையினர் தனியார் பேருந்துகள் விதிகளை மீறி இயக்கப்படுகின்றனவா என சோதனை செய்யப்படுகின்றது.  கடந்த அக்.31-ம் தேதி முதல் நவ.4-ம் தேதிவரை தனியார் பேருந்துகளை சோதனை செய்ததில் 414 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.1.54 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் தனியார் பேருந்து உரிமையாளகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறினால் தனியார் பேருந்து உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

  போதுமான அளவு குளிர்ச்சாதன பேருந்துகள் உள்ள நிலையில், ஆந்திர மாநில விபத்தை அடுத்து இனி குளிர்சாதன பேருந்துகள்(வால்வோ பேருந்துகள்) வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் தலா 11 லட்சம் கி.மீ வரை இயக்கப்படுகிறது. ஆனால் கர்நாடகத்தில் 7.5 லட்சம் கி.மீ மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. பின்னர் அவைகளை சேவையில் ஈடுபடுத்துவதில்லை என்றார்.

  மேலும் பல்வேறு மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு,  நோய்களால் பாதிக்கப்படும் போக்குவரத்து ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆகும் செலவுகளை, நபர் ஒருவருக்கு ஒருமுறை மட்டும் போக்குவரத்து துறையே வழங்கவும் முடிவு செய்துள்ளது. மருத்துவமனைகளில் தவறு நடக்கும் பட்சத்தில் அம்மருத்துவமனைகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai