சுடச்சுட

  

  21-வது நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்: மத்திய இணை அமைச்சர் மணீஷ்திவாரி

  By dn  |   Published on : 06th November 2013 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  21-வது நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்று  மத்திய தகவல் தொழில்துறை இணை அமைச்சர் மணீஷ்திவாரி தெரிவித்தார்.

  கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் அங்கோலாவில் செவ்வாய்க்கிழமை கனரா பொதுநல அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியது: திறமையுள்ள இளைஞர்கள் பலரை நம்நாடு பெற்றுள்ளது. இது நமது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக உள்ளது. ஆசியா கண்டத்தில் இந்தியா மற்றும் சீனாவிற்கு பெருகி வரும் மக்கள்தொகை பெரும் பிரச்னையாக உருவாகியுள்ள போதும், இளைஞர்கள் படை பொருளாதாரத்தை பெருக்குவதற்கு நமக்கு கவசமாக விளங்கி வருகின்றனர். இதனால் உலகளவில் பொருளாதார ரீதியில் இந்தியா வல்லரசாக மாறி வருகிறது. பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களை உருவாக்கிய நமது நாட்டில், இளைஞர்கள் நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் கட்டி காப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.21-வது நூற்றாண்டை இந்திய நூற்றாண்டாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் என்றார்.

  கர்நாடக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே பேசியது: பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில் 21-வது நூற்றாண்டை நமது நூற்றாண்டாக மாற்றுவது மாணவர்களுக்கும், இளைஞர்களும் பெரிதான காரியமாக இருக்காது. இளைஞர்கள் நமது நாட்டின் இன்றியமையாத சொத்துகள். உலகமயமாக்களை அவர்கள் எதிர்கொண்டு, தங்களது திறமைகளை வெளி கொணர வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் கனரா பொதுநல அறக்கட்டளையின் தலைவர் தேவதத்காமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai