சுடச்சுட

  

  எடியூரப்பாவின் போராட்டம்  அரசியல் நோக்கம் கொண்டது

  By  மைசூர்,  |   Published on : 07th November 2013 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் திருமண நிதியுதவித் திட்டம் தொடர்பான எடியூரப்பாவின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.
   இதுகுறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
   அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கர்நாடக முன்னாள் முதல்வரும், கஜக தலைவருமான எடியூரப்பா மாநில அரசின் திருமண நிதியுதவித் திட்டத்தைக் கண்டித்து, தர்னாவில் ஈடுபட்டு வருகிறார்.
   இவரது போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. எடியூரப்பா முதல்வராக இருந்த போது, இந்தத் திட்டத்தை அவர் கொண்டு வராதது ஏன்? ஏற்கெனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, தற்போது இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
   இந்தத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எடியூரப்பா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தற்போது, இந்தத் திட்டத்தைக் கண்டித்து, அவர் போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டம் நடத்த மக்களாட்சியில் அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதால், அவரது போராட்டத்தை எதிர்ப்பதற்கு எனது மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை.
   ஏழைப் பெண்களின் துயர் துடைக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்தத் திருமண நிதியுதவித் திட்டத்தில் எவ்விதக் குறையும் இல்லை. ஏழை முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்லாது, கிறிஸ்தவ, சமண, பார்சி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர். பேட்டியின் போது, மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் மகாதேவப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai