சுடச்சுட

  

  மக்களவை பொதுத் தேர்தலில் கர்நாடகத்தில் பாஜக எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என்று, அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆயனூர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
   இதுகுறித்து ஷிமோகாவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
   அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் கர்நாடகத்தில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைத்துக் கொள்ளாது. மாநிலத்தில் கூட்டணி அமைக்க பாஜகவின் தேசிய நாடாளுமன்றக் குழு அனுமதி அளிக்கவில்லை. எனினும், அவசியம் ஏற்பட்டால், இதுகுறித்து தேசிய தலைமை இறுதி முடிவு எடுக்கும்.
   கர்நாடகத்தில் நரேந்திர மோடிக்கு உருவாகியுள்ள ஆதரவு அலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள வேற்றுக் கட்சியைச் சேர்ந்த சிலர், மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதாகக் கூறி வருகிறார்கள்.
   வேற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் பாஜகவில் சேர்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து பாஜக தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai