சுடச்சுட

  

  காமன்வெல்த் மாநாடு: இந்தியா பங்கேற்கக் கூடாது:  முன்னாள் எம்எல்ஏ முனியப்பா வலியுறுத்தல்

  By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் உள்பட யாரும் பங்கேற்கக் கூடாது என்று, கர்நாடக மாநிலம், காந்திநகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.முனியப்பா வலியுறுத்தினார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
   இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில், ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா.சபை மட்டுமன்றி, பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
   இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கனடா கலந்து கொள்வதில்லை என அறிவித்துள்ளது. இதேபோல, அந்த மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொள்ளக் கூடாது.
   இதையும் மீறி, பிரதமர் உள்பட யாரேனும் அந்த மாநாட்டில் பங்கேற்றால், அது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும். இலங்கையில் இறந்தவர்கள் தமிழர்கள் என்றாலும், அவர்கள் கன்னடர்களை உள்ளடக்கிய திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai