சுடச்சுட

    

    சமணக் கோயிலில் திருடப்பட்ட சாமி சிலைகள் மீட்பு

    By  மங்களூர்,  |   Published on : 07th November 2013 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலம், மங்களூர் அருகேயுள்ள மூடுபித்ரி சமணக் கோயிலில் அண்மையில் திருடு போன சாமி சிலைகள் மீட்கப்பட்டன.
     மூடுபித்ரி சமணக் கோயிலில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி ரூ. 75 கோடி மதிப்புள்ள தங்கச்சிலைகள் உள்ளிட்ட 20 ஐம்பொன் சிலைகள் திருடு போனது. இதுகுறித்து அந்தக் கோயிலின் நிர்வாகி சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், மூடுபித்ரி போலீஸôர் விசாரணை நடத்தினர்.
     இந்த நிலையில், ஒடிஸô மாநிலத்தைச் சேர்ந்த திகம்பர மொகந்தி, தீப்திமாயி ஆகிய இருவரை போலீஸôர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 ஐம்பொன் சிலைகள் உள்பட 5 தங்கச் சிலை, உருக்கிய நிலையில் 1 கிலோ தங்கக் கட்டிகள், ரூ. 2.05 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
     மேலும், அந்த வழக்கு தொடர்பாக ராஜாஜி, சுபாஷ், தாஸ் ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர்.
     இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்திற்கு 750 கிராம் எடையுள்ள 12 தங்கச் சிலைகள் விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், மூடுபித்ரி சமணக் கோயிலில் திருடு போன ரூ. 75 கோடி மதிப்பிலான சிலைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக மங்களூர் காவல் ஆணையர் மணீஷ் கார்பேகார் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai