சுடச்சுட

    

    திருமண நிதியுதவித் திட்டத்தைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

    By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமுதாயப் பெண்களுக்கும் விரிவுபடுத்தக் கோரி, பெங்களூருவில் பாஜக மகளிர் அணியினர் புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     பெங்களூரு மைசூர்வங்கி சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பாஜக சட்ட மேலவை உறுப்பினர் நடிகை தாரா கூறியது:
     கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் திருமண நிதியுதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏழைப் பெண்கள் அனைத்து சமுதாயத்திலும் உள்ளனர். அவர்களும் பயன்பெறும் வகையில், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
     ஜெயநகர் தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் கூறியது:
     மக்களவைத் தேர்தலையொட்டி, சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்தத் திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
     மதங்களைக் கடந்து ஒற்றுமையாக வாழும் மக்களை மத்திய, மாநில அரசுகள் தவறானப் பாதைக்கு அழைத்து செல்கின்றன.
     மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சித்தராமையா இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai