சுடச்சுட

  

  நவம்பர் 16- இல் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு நடைபயணம்

  By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் லைப்ஸ்டைல் நிறுவம் சார்பில், நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
   இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கபீர்லும்பா புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
   இந்திய அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோயினால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் உள்ளது.
   எனவே, அனைவரும் ஒன்றிணைந்து நீரிழிவு நோய்க்கு எதிராக போராட வேண்டும். இந்த நோய்க்கு சுற்றுச்சூழல் மட்டுமன்றி, உணவுப் பழக்கமும் ஒரு முக்கிய காரணம். இதை வலியுறுத்தும் வகையில், வருகிற 16-ஆம் தேதி காலை 6.30 மணியளவில் பெங்களூருவில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
   கண்டீரவா உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கும் இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்பவர்கள் வருகிற 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை லைப்ஸ்டைல், போசினி, மேக்ஸ், ஸ்பலாஷ் உள்ளிட்ட மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai