சுடச்சுட

    

    பெங்களூரு பல்கலை.யில்  நான்கு ஆண்டு பட்டப் படிப்பு: அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகம்

    By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று, அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திம்மே கெüடா தெரிவித்தார்.
     கன்னட வளர்ச்சி ஆணையத்தின் சார்பில், பெங்களூரு அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கன்னட ஆராய்ச்சி மையம், கலாசார முகாமையைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
     தில்லி பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து, பெங்களூரு பல்கலைக்கழகத்திலும் அடுத்த கல்வியாண்டு முதல் நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பு அறிமுகம் செய்யப்படும்.
     தற்போதுள்ள மூன்று ஆண்டு பட்டப் படிப்பும் நடைமுறையில் இருக்கும்.
     நான்கு ஆண்டு பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், ஓராண்டு ஹானர்ஸ் பட்டம் பெற்று நேரடியாக முனைவர் பட்டம் பெற தகுதிப் பெறுவார்கள்.
     நான்கு ஆண்டு பட்டப் படிப்புக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. வெளிநாடுகளில் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு முறை அமலில் உள்ளன. சமுதாயக் கல்லூரி, நான்கு ஆண்டு பட்டப் படிப்பு ஆகியவை குறித்து ஆராய்வதற்காக வருகிற 18-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
     பெங்களூரு பல்கலைக்கழக வரம்புக்குள்பட்ட கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் கன்னட ஆராய்ச்சி மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும். நிகழாண்டில், கன்னட ஆராய்ச்சி மையத்தில் 580 மாணவர்கள் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
     விழாவில் கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் முக்கியமந்திரி சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai