சுடச்சுட

  

  போக்குவரத்து குறித்த புகார்களை  தெரிவிக்க தொலைபேசி மையங்கள்:  அமைச்சர் ராமலிங்க ரெட்டி தகவல்

  By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி மையங்கள் அமைக்கப்படும் என்று, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
   பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழம் சார்பில், எலஹங்கா பணிமனையில் புதன்கிழமை நடைபெற்ற கர்நாடக உதய தின விழாவில் அவர் பேசியது:
   பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், பேருந்து நிலையம், பணிமனை ஆகிய பகுதிகளில் தொலைபேசி மையங்கள் அமைக்கப்படும்.
   இந்த மையங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு பதிலளிக்கப்படும். மாநகரப் போக்குவரத்தில் சிலர் வருவாய் இழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
   இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகரப் போக்குவரத்தில் வாகனச் சோதனை ஆய்வாளர் பணிக்கு கூடுதலாக 125 பேர் நியமிக்கப்படுவர். மாநகரில் 2 பயிற்சி மையங்கள், 8 பணிமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
   பெங்களூருவில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் வாகனங்கள் இயங்குவதால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதைக் குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai