Enable Javscript for better performance
\\\"விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'

    By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று, சில்வர் ஸ்டிரிங் ஸ்போர்ட்ஸ் இயக்குநர் முக்கேஷ் சேத்தன் வலியுறுத்தினார்.
     பெங்களூருவில் சில்வர் ஸ்டிரிங் ஸ்போர்ட்ஸ் மையம் சார்பில், புதன்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிப்பதற்கான 3 சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
     வெளிநாடுகளில் கல்வியைப் போல விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
     இதனால், அவர்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
     ஆனால், இந்தியாவில் விளையாட்டுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதில்லை.
     இதனால், பெரும்பாலான மாணவர்கள் உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களாக உள்ளனர்.
     சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்கு விளையாட்டை ஊக்குவித்தால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
     பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. இது தவறான செயலாகும். எங்கள் மையத்தில் மாணவர்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
     நிகழ்ச்சியில் தொழில் முறை டென்னிஸ் பயிற்சியாளர் அடிரியன் ரேட்டன்பரி,சிப்மோர்லேண்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai