சுடச்சுட

  

  கர்நாடக மாநிலம், ஹாசனிலிருந்து பெங்களூருவுக்கு வந்த அரசுப்  பேருந்தில் வியாழக்கிழமை திடீர் தீ விபத்து நேரிட்டது. உடனடியாக பயணிகள் கீழே  இறக்கிவிடப்பட்டதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

  ஹாசனிலிருந்து வியாழக்கிழமை பெங்களூருக்கு வந்த குளிர்சாதன வசதிக் கொண்ட அரசு  சொகுசுப் பேருந்து, கொரகொண்டேபாளையத்தில் திடீரென தீப் பிடித்து எரிந்தது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.

  தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த தீ விபத்து குறித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியது:

  பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் பேரில், விபத்திற்கான காரணம் தெரிய வரும். போக்குவரத்து ஊழியர்கள் அல்லது ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து நேரிட்டிருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai