சுடச்சுட

    

    பெங்களூரு அருகே கணவர் கொலை வழக்கில் அவரது மனைவி உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    பெங்களூரு ஜாலஹள்ளியைச் சேர்ந்தவர் தயானந்தசாமி (55). இவரது மனைவி ரத்னா (33). தம்பதிக்கு ஸ்வேதா, சரத் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. அடுமனை வியாபாரம் செய்து வந்த தயானந்தசாமியுடன் அவரது அக்காள் மகன் சென்னபசப்பா (27) உதவியாளராக இருந்து வந்தாராம்.

    இந்த நிலையில், சென்னபசப்பாவுடன் ரத்னா நெருக்கமாக பழகி வருவதை தயானந்தசாமி கண்டித்தாராம். இதுதொடர்பாக புதன்கிழமை இரவு ரத்னாவுக்கும், தயானந்தசாமிக்கு தகராறு ஏற்பட்டதாம்.

    அப்போது, அங்கு வந்த சென்னபசப்பாவும், ரத்னாவும் சேர்ந்து தாக்கியதில், பலத்த காயமடைந்த தயனாந்தசாமி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஜாலஹள்ளி போலீஸார், ரத்னா, சென்னபசப்பாவைக்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai