சுடச்சுட

    

    கரும்புக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்: முதல்வர்

    By பெங்களூரு  |   Published on : 08th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் கரும்புக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூரு விதான செüதாவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    கரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி, விவசாயிகள் மாநில அளவில் நடத்தி வரும் போராட்டங்களைக் கைவிட வேண்டும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் கரும்புக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.

    இதுகுறித்து உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் மீண்டும் நடைபெறும். விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்கும். எனவே, இதுகுறித்து விவசாயிகள் குழப்பம் அடைய வேண்டாம்.

    கல்லூரி மாணவி செüஜன்யா கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்துள்ளோம். வருகிற 25-ஆம் தேதி பெல்காமில் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும். இதில் பல்வேறு பிரச்னைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai