சுடச்சுட

  

  அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் துறை சட்ட விதிகளில் மாற்றம் செய்வது அவசியம் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தினார்.

  பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற காவல் துறை ஆணையர்களுக்கான மாநாட்டில் அவர் மேலும் பேசியது:

  பொதுமக்களுக்கு சேவை செய்வதில் காவல் துறை முதல் இடத்தில் உள்ளது. ஜனநாயகத்தைக் காப்பதிலும் இந்தத் துறை முக்கியப் பங்காற்றுகிறது. 1861- இல் நடைமுறைப்படுத்தப்பட்ட காவல் துறை சட்ட விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

  எனினும், அண்மைக் காலங்களில் காவல் துறையின் நடவடிக்கைகளில் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், நீதிமன்றங்கள் காவல் துறைக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

  எனவே, காவலர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகையால் நகரங்களில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. நாள்தோறும் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை காவலர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

  எனவே, காவலர்களுக்கான சட்ட விதிகளில் மாறுதல் தேவைப்படுகிறது. இந்த மாநாட்டில், காவல் துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் பொன் விழா கொண்டாடும் நேரத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவது பாராட்டத்தக்கது என்றார் அவர்.

  மாநாட்டில் மாநில அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ, டிஜிபி லால்ரொக்குமோ பச்சாவ், பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai