சுடச்சுட

  

  பெங்களூரு அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

  பெங்களூரு தேவனஹள்ளியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (35). இவர், புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதே பகுதியில் உள்ள பி.பி.சாலையைக் கடக்க முயன்றாராம்.

  அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத் காயமடைந்த நாராயணசாமி அதே இடத்திலே உயிரிழந்தார்.

  இந்த விபத்து குறித்து சர்வதேச விமான நிலைய போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai