சுடச்சுட

  

  பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்புக் கருவிகள் அவசியம்

  By பெங்களூரு,  |   Published on : 08th November 2013 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்புக் கருவிகளை அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்று, யூபிஎம் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜோஜி ஜார்ஜ் தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  தெற்கு ஆசியாவில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். பாதுகாப்புக் கருவிகளை அதிக அளவு பயன்படுத்தினால், பயங்கரவாதத்தை தடுக்க முடியும்.

  வங்கிகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், திரையரங்குகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், விளையாட்டு மைதானங்களில் பாதுகாப்புக் கருவிகள் பொருத்துவதன் மூலம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.

  இதை ஊக்கப்படுத்தும் வகையில், வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை தில்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள இந்திய கண்காட்சி மையத்தில் வணிகப் பாதுகாப்பு, குடிமைப் பாதுகாப்பு மற்றும் தீத் தடுப்பு கண்காட்சி நடைபெறும்.

  இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 250 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு தனி வாயில்கள் அமைக்கப்படும். பத்தாயிரம் பேர் இந்தக் கண்காட்சியை காண வருவார்கள். இந்தியாவில் பாதுகாப்புக் கருவித் தொழில் 30 சதம் வளர்ச்சி அடைந்து, ரூ. 3 ஆயிரம் கோடி அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

  பேட்டியின் போது, கண்காட்சிக் குழு இயக்குநர் பங்கஜ் ஜெயின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai