சுடச்சுட

  

  புன்செய் விவசாய மேம்பாட்டுக்கு தனிக் கொள்கை

  By பெங்களூரு,  |   Published on : 08th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் புன்செய் விவசாய மேம்பாட்டுக்கு தனிக் கொள்கை வகுக்கப்படும் என்று,  முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

  பெங்களூரு விவசாயப் பல்கலைக்கழகம் சார்பில்,  பெங்களூரு காந்தி வேளாண் அறிவியல் மையத்தில் 5 நாள்கள் நடைபெறும் பன்னாட்டு விவசாயக் கண்காட்சியை வியாழக்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியது:

  அண்மைக்காலமாக புன்செய் விவசாயம் நலிந்து வருகிறது. இந்த விவகாரத்தை வேளாண் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து, தீர்வு காண வேண்டும். புன்செய் விவசாயம் தொடர்பாக அதிகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும். புன்செய் விவசாயம், குறுநில  விவசாயிகளின் மேம்பாட்டுக்காக தனிக் கொள்கை வகுக்கப்படும்.

  ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நாட்டில் புன்செய் விவசாயத்தை நம்பியிருப்போர் எண்ணிக்கை கர்நாடகத்தில் அதிகம். எனவே, புன்செய் விவசாயத்தை ஊக்குவிக்க அரசு தயாராக உள்ளது.

  புன்செய் விவசாயத்திற்கு தகுந்த விதைகள், நாற்றுகளைக் கண்டறிய வேண்டும். புன்செய் நிலத்தில் அதிக மகசூல் கிடைக்கும் பயிர்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.

  இதேபோல, கால்நடைவளர்ப்பு, பால் உற்பத்தி, பன்றி வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் விவசாயிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் நலன் கருதி விவசாயப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் அனைத்து ஆராய்ச்சிப் பணிகளுக்கும் கர்நாடக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். விவசாயத் தொழில் லாபகரமானதாக மாறினால், பலரும் இந்தத் தொழிலில் ஈடுபடுவார்கள்.

  உற்பத்திச் செலவை குறைத்தால் விவசாயத்தில் லாபம் கிடைக்கும். அதற்கான வழிமுறைகளை விவசாயப் பல்கலைக்கழகங்கள் கண்டறிய வேண்டும். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் அதிகளவில் நடைபெற வேண்டும்.  பன்னாட்டு வேளாண் கண்காட்சிகளை போல, மாவட்ட அளவில் வேளாண் கண்காட்சிகள் நடைபெற வேண்டும் என்றார் அவர்.

  விழாவில் மாநில வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெüடா, பல்கலைக்கழகத்   துணைவேந்தர் நாராயண கெüடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai