Enable Javscript for better performance
பெங்களூருவில் தானியங்கி கழிவறைகள் அமைக்கப்படும்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவில் தானியங்கி கழிவறைகள் அமைக்கப்படும்

    By பெங்களூரு,  |   Published on : 08th November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் தானியங்கி கழிவறைகள் அமைக்கப்படும் என்று, மேயர் சத்தியநாராயணா தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    மாநகரின் முக்கிய இடங்களில் 100 தானியங்கி கழிவறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கழிவறையில் உள்ள இயந்திரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை செலுத்தினால், கதவுகள் தானாக திறக்கும்.

    இவற்றில் சேகரமாகும் மனிதக் கழிவுகள் நவீன தொழில்நுட்ப முறையில் சுத்தம் செய்யும் வசதி உள்ளது.

    குறைந்த இட வசதியில், குறைந்த செலவில் இந்தக் கழிவறைகள் அமைக்கலாம். தில்லி, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, சோதனை முறையில் பெங்களூருவில் 100 இடங்களில் இந்தக் கழிவறைகள் அமைக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai