சுடச்சுட

    

    மாணவர்களிடையே புத்தகம் படிக்கும்  பழக்கத்தை வளர்க்க வேண்டும்

    By பெங்களூரு,  |   Published on : 08th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர், ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும் என்று, கர்நாடக கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கேட்டுக் கொண்டார்.

    பாரத சாரணர்- சாரணியர் கர்நாடகக் கிளை சார்பில், பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் கொடிநாள் விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: நல்லொழுக்கவும், நற்பண்புகளும் குழந்தைகளை தெய்வமாக்குகின்றன. கறைபடிந்த சிந்தனையும், எண்ணங்களும் உள்ள பெரியவர்கள் குழந்தைகளின் சிந்தனையில் ஜாதி, மத, மொழி பேதங்களை விதைக்கின்றனர்.

    குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காக சாரணர்- சாரணியர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. மாணவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை பெற்றோர், ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

    அழகான உலகத்தை குழந்தைகள் நூல்கள் மூலம் கண்டறியலாம். வரலாறுகளை மாற்றியமைப்பது சுலபமல்ல.

    அந்த வரலாறுகளையே மாற்றியமைத்தவர்கள் புத்தர், காந்தி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற ஒரு சிலரால் நடந்துள்ளன.

    வித்தியாசமான அணுகுமுறை மட்டுமல்லாது, கடுமையான உழைப்பும் இந்த வெற்றியை  பெற்று தந்துள்ளது. எனவே, குழந்தைகள் உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் சாரணர்,  சாரணியர் இயக்கத்தில் அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றார் அவர்.

    விழாவில் கர்நாடக முன்னாள் அமைச்சர் பி.ஜி.ஆர்.சிந்தியா, கல்வித் துறை ஆணையர் முகமது மொகசீன், அந்த இயக்கத்தின் மாநில தலைமை ஆணையர் கொண்டஜ்ஜி சண்முகப்பா, மாநில இணைச் செயலாளர் எம்.ஏ.செல்லையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai