சுடச்சுட

  

  மார்ச் 28-இல் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு

  By பெங்களூரு,  |   Published on : 08th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அடுத்தாண்டு மார்ச் 28-ஆம் தேதி தொடங்குகிறது.

  இதுகுறித்து கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2013-14-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு அடுத்தாண்டு மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  முதல் மொழிப் பாடத்துடன் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை எழுதுவோருக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரைக்கும், இரண்டு மற்றும் மூன்றாம் மொழிப் பாடங்களுடன் மற்ற பாடங்களை எழுதுவோருக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரைக்கும் தேர்வு நடைபெறும்.

  அடுத்தாண்டு மார்ச் 28-ஆம் தேதி கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய முதல் மொழிப் பாடங்களும், ஏப்ரல் 1-ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வும் நடைபெறும்.

  இதேபோல, ஏப்ரல் 3-ஆம் தேதி அறிவியலும், 4-ஆம் தேதி இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரபிக், பெர்சியன், உருது, சமஸ்கிருதம், கொங்கணி ஆகிய மூன்றாம் மொழிப் பாடங்களும், 7-ஆம் தேதி சமூக அறிவியலும், 9-ஆம் தேதி

  ஆங்கிலம், கன்னடம் ஆகிய இரண்டாம் மொழிப் பாடங்களுக்கும் தேர்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai