சுடச்சுட

  

  மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்: மத நம்பிக்கையைத் தடுக்கும் முயற்சி

  By பெங்களூரு  |   Published on : 08th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் மூலம், மத நம்பிக்கையைத் தடுக்க  கர்நாடக முதல்வர் சித்தராமையா முயற்சிப்பதாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் சதானந்த கெüடா குற்றஞ்சாட்டினார்.

  பெங்களூரு மல்லேஸ்வரத்தில் கர்நாடக பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அந்தக் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கெüடா கூறியது:

  பெங்களூருவில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் பேரணி, மாநாட்டில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து உயர்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்த முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார். இது மூடநம்பிக்கை என்ற பெயரில் மத நம்பிக்கையைத் தடுக்கும் முயற்சியாகும். எனவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்த பாஜக முழு எதிர்ப்பு தெரிவிக்கும்.

  பெல்காமில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், சுரங்க முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம்.

  இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தோஷ்லாட்டை  அமைச்சரவையிலிருந்து நீக்க வலியுறுத்துவோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai