சுடச்சுட

  

  பெங்களூருவில் பாஜக சார்பில் வருகிற

  17-ஆம் தேதி நடைபெறும் மாநாடு, பேரணியில் கலந்து கொள்ளும் நரேந்திர மோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று, கர்நாடக உள் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

  பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஐசிஸ் மருத்துவ ஆய்வு மையத்தைத்  தொடக்கிவைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  பெங்களூருவில் பாஜக சார்பில் நடைபெறும் பேரணி, மாநாட்டில் அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவருக்கு  "இஸட்'  பிரிவுக்கான  பாதுகாப்பு வழங்கப்படும்.

  இதுதொடர்பாக தனக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் முதல்வர் சித்தராமையா  உத்தரவிட்டுள்ளார்.

  கல்லூரி மாணவி செüஜன்யா கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் வசந்த்பங்கேரா, தர்மஸ்தலா தர்ம அதிகாரி வீரேந்திர ஹெக்கடே உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார். முன்னதாக, விழாவில் அவர் பேசியது:

  நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் மகப்பேறு மருத்துவத்தில் நாம் பின்தங்கியுள்ளது கவலை அளிக்கிறது. நகரங்களில் சிறந்த மருத்துவமனைகள் உள்ளதால், மகப்பேறு சிறப்பாக நடைபெறுகிறது.

  ஆனால், ஊரகங்களில் போதிய வசதி இல்லாததால், பிரசவ நேரங்களில் தாய் அல்லது குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது. இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

  மருத்துவத்தில் நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில், மகப்பேறு மருத்துவம் நமது நாட்டில் நூறு சதம் முன்னேற வேண்டும் என்றார் அவர்.  விழாவில் எம்எல்ஏக்கள் டி.கே.சிவக்குமார், அஸ்வத்நாராயணா, ஐசிஸ் மருத்துவ ஆய்வு மைய இயக்குநர்கள், ஆஷாலதா கணேஷ், பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai