சுடச்சுட

  

  "உலகச் சந்தையில் போட்டியிட தரமான உற்பத்திப் பொருள்கள் அவசியம்'

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலகச் சந்தையில் போட்டியிடுவதற்கேற்ப தரமான உற்பத்திப் பொருள்களை இந்திய நிறுவனங்கள் தயாரிப்பது முக்கியம் என்று, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டி.சி.ஏ.ரங்கநாதன் தெரிவித்தார்.

  இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 21-ஆவது தேசிய தர உச்சிமாநாட்டில் அவர் மேலும் பேசியது:

  உற்பத்தித் தொழிலில் இந்தியா பெரிய அளவிலான வெற்றியை ஈட்டவில்லை. உற்பத்தித் தொழிலின் உண்மையான வளர்ச்சி இன்னும் வெளிப்படவில்லை. எனவே, உற்பத்தித் தொழிலின் திறனை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.

  உலக அளவில் இந்திய பொருள்கள் சந்தைப்படுத்த வேண்டும். உலகச் சந்தையில் போட்டியிட தரமான உற்பத்திப் பொருள்களைத் தயாரிப்பது அவசியம். எனவே, உலக அரங்கில் போட்டியிடுவதற்கான தகுதியை இந்திய நிறுவனங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  தேசிய உற்பத்தி போட்டியுணர்வு கவுன்சில் உறுப்பினர் செயலாளர் அஜய்சங்கர் மாநாட்டைத் தொடக்கிவைத்து பேசியது:

  வர்த்தகத்தின் போக்கை யாராலும் கணிக்க முடியாது. இந்திய நிறுவனங்கள், உலக அளவில் போட்டியிடும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உற்பத்தித் தொழில் நாம் என்றைக்கும் தோல்வி அடைந்தது கிடையாது. வெளிநாட்டுச் சந்தையில் வெற்றி பெற உள்நாட்டுச் சந்தையின் வெற்றி வழி வகுக்கும்.

  வர்த்தகக் குறிக்கோள், தன்னம்பிக்கை, அரசு மீது சார்ந்திராமை போன்றவை இந்திய உற்பத்தித் தொழிலை தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இணையான வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் என்றார் அவர்.

  மாநாட்டில் சிஐஐ தர மையத்தின் தலைவர் என்.குமார், அதன் முன்னாள் தலைவர் எல்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai