சுடச்சுட

    

    கர்நாடகத்தில் அடுத்தாண்டு ஜனவரி

    10-ஆம் தேதி ஹம்பி உத்ஸவம் தொடங்குவதாக அந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பரமேஸ்வர் நாயக் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    அடுத்தாண்டு ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் ஹம்பி உத்ஸவத்தை பெல்லாரி மாவட்டம், ஹம்பியில் முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கிறார்.

    கர்நாடக அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, மண்டியா மக்களவை உறுப்பின ரம்யா உள்ளிட்டோர் உத்ஸவத்தில் கலந்து கொள்கின்றனர். விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் கர்நாடக கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், உமாஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஹம்பி உத்ஸவத்திற்காக ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai