சுடச்சுட

  

  கர்நாடக இளைஞர் காங்கிரஸில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக இளைஞர் காங்கிரஸில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  இதுகுறித்து கர்நாடக இளைஞர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.டி.பின்னி வெளியிட்ட அறிக்கை:

  கர்நாடக இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும் வாய்ப்பளிக்கப்படும். வாக்காளர் பட்டியலை ஜ்ஜ்ஜ்.ண்ஹ்ஸ்ரீ.ண்ய்ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

  மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலைப் பெறலாம். மக்களவை தொகுதி வாரியாக பார்வையாளர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். திருத்தங்களை பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம்.

  வாக்காளர் பட்டியலை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ நடத்தி வரும் ஃபேம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்படும்.

   உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முடிந்ததும், நிர்வாகிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9591566087 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai