சுடச்சுட

  

  காவலர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குற்றங்களைத் தடுக்க, காவலர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று, கர்நாடக ஆளுநர்

  எச்.ஆர்.பரத்வாஜ் அறிவுறுத்தினார்.

  பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய காவல் ஆணையர்களுக்கான மாநாட்டு நிறைவு விழாவில் அவர் பேசியது:

  குற்றச் செயல்களைத் தடுக்க, போலீஸார் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு போலீஸார் நல்ல நண்பனாகத் திகழ வேண்டும். போலீஸார் சில நேரங்களில் மனித உரிமைகளை மீறி செயல்படுகின்றனர். இது தவறு.

  அரசின் உத்தரவுக்கு இணங்க அவர்கள் செயல்படுவதால், பல நேரம் அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கும். எனவே, குற்றங்கள் குறைய போலீஸாரை சுதந்திரமாக செயல்பட அந்தந்த மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்.

  காவல் துறையை ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுத்தான்,  குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த முடியும். காவல் துறையில் கீழ் நிலையில் பணிபுரிபவர்களை அந்தத் துறையின் உயர் அதிகாரிகள் மதிப்பதில்லை. இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

  காவல் துறை சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் தலைத் தூக்கி உள்ளது நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது. மகளிர் மீது வன் கொடுமை, சிறுவர்கள் தாக்குதல் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

  குற்றச் செயலில் ஈடுபடுவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வளர விடக் கூடாது.

   குற்றச் செயல்களைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பங்களை, அறிவியில் ரீதியில் கண்டுபிடிக்க வேண்டும். பொதுமக்கள் கவலையில்லாமல் இருக்கும் வகையில், சட்டம்- ஒழுங்கை போலீஸார் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.  விழாவில் மாநில அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், டிஜிபி லால்ரொக்குமோ பச்சாவ், பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai