சுடச்சுட

  

  "தரமான கல்விக்கு தகவல் தொழில்நுட்பம் உதவும்'

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க தகவல் தொழில்நுட்பம் உதவும் என்று, நியூ கேசல் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுகதா மித்ரா தெரிவித்தார்.

  இந்திய வர்த்தக மாநாட்டு மையத்தின் சார்பில், பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  இரண்டு நாள் தேசிய கல்வி மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: இந்தியாவில் கல்வி சவாலானதாக மாறி வருகிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பிறகு,  கல்வியின் போக்கில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலக அளவில் தரமான கல்விக்கு முக்கியத்துவம்  அதிகரித்து வருகிறது.

  இந்தியாவிலும் தரமான கல்வியை அளிக்க தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பயனளிக்கும். புதிய தலைமுறை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் எளிதாக புரிகிறது. மேலும் எதையும் ஆழமான, தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.

  கடினமான அறிவியல் கருத்தியல்களை தகவல் தொழில்நுட்பத்தின் வழியாக எளிமையாக புரிந்து கொள்ளலாம். இந்திய கல்வி நிறுவனங்கள், உலகத் தரத்திலான கல்வி முறைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  கற்பித்தல் முறையில் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

  புதுமையாக போதிக்கும் முறையை கையாளத் தவறினால், மாணவர் சமுதாயத்தில் இருந்து ஆசிரியர்கள் விலகி நிற்க நேரிடும் என்றார் அவர்.

  மாநாட்டில் கிரேயா லெர்னிங் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி ஹரி, டூன்பூன் நிறுவனத் தலைவர் ஜோன் வோகெலேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai