சுடச்சுட

  

  நவம்பர் 14- இல் இயற்கை விவசாய விளை பொருள்கள் கண்காட்ச

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் இயற்கை விவசாய விளை பொருள்கள் கண்காட்சி வருகிற 14-ஆம் தேதி தொடங்குகிறது.

  இதுகுறித்து வேளாண் துறை இயக்குநர் தர்மராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  பெங்களூர் அரண்மனை மைதானத்தில் வருகிற 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு இயற்கை விவசாய விளை பொருள்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதை  கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கிறார்.

  இந்த விழாவில் மாநில வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெüடா, தோட்டக்கலைத் துறை அமைச்சர் ஷாமனூர் சிவசங்கரப்பா, சந்திரே கெüடா எம்பி, எம்எல்ஏ ரோஷன் பெய்க் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

  கண்காட்சியில் ஜெர்மன், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் 7,800 பேர் கலந்து கொண்டனர்.  இவர்களில் 3,800 பேர் விவசாயிகள். இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தை செய்ய பலர் ஆர்வமாக உள்ளனர்.

  கர்நாடகத்தில் கடந்த 2003-இல் 42 ஆயிரம் ஹெக்டரில் பயிரிடப்பட்ட இயற்கை விவசாயம். தற்போது 10.20 லட்சம் ஹெக்டராக குறைந்துள்ளன. இயற்கை விவசாயத்திற்கு அரசு ஊக்கமளித்து வருகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai