சுடச்சுட

  

  பாஜக முன்னாள் எம்எல்ஏக்கள் மூவர் காங்கிரஸில் இணைந்தனர்

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடகத்தில் பாஜக முன்னாள்

  எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

  பெங்களூரு குயின்ஸ் சாலையில் அமைந்துள்ள கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பசவராஜ்(பிரியாபட்டணா), பாரதி சங்கர் (டி.நரசிபுரா), கிருஷ்ணப்பாவை (பன்னூர்) ஆகியோர் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் முன்னிலையில் காங்கிரஸில் சேரந்தனர்.

  இதுகுறித்து பசவராஜ் கூறியது:

  கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நல்லாட்சி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அந்தக் கட்சியில் நாங்கள்

  இணைந்துள்ளோம். காங்கிரஸின் தத்துவங்கள், கொள்கைகள் எங்களை ஈர்த்துள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai