சுடச்சுட

  

  பெங்களூருவில் டிசம்பர் 8- இல் தொடர் ஓட்டப் பந்தயம்

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி தொடர் ஓட்டப் பந்தயம் நடைபெறுகிறது.

  இதுகுறித்து நைஸ் நிறுவனத் தலைவரும், பீதர் தொகுதி எம்.எல்.ஏவுமான அசோக்கேணி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  பெங்களூருவில் வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி தும்கூர் நைஸ் சாலையிலிருந்து ஓசூர் சாலை வரை 41 கி.மீ. தொலைவுக்கு தொடர் ஓட்டப் பந்தயம் நடைபெறுகிறது. 5 கி.மீ., 10 கி.மீ. தொலைவு என இரு பிரிவுகளில் இந்தப் பந்தயம் நடைபெறுகிறது.

  இந்தப் பந்தயத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். எல்லா பிரிவுகளிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்தப் பந்தயத்தில் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai