சுடச்சுட

    

    பெங்களூருவில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடமிருந்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பெங்களூரு பி.டி.எம் லேஅவுட்டைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர், வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மகேஸ்வரியின் கழுத்திலிருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்கச் சங்கியைப் பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து பி.டி.எம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாகனத் திருட்டு வழக்கில் மூவர் கைது

    பெங்களூருவில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

    பெங்களூரு கே.பி.அக்ரஹாராவைச் சேர்ந்த வினோத் சேகர் (23), திப்புஹுசேன் (22), சந்தோஷ் (22) ஆகிய மூவரும் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் வீட்டுக்கு முன் நிறுத்தியிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தனராம்.

    இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய சாம்ராஜ்பேட்டை போலீஸார், வினோத் சேகர், திப்புஹுசேன், சந்தோஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai