சுடச்சுட

    

    வன உற்பத்திப் பொருள்கள் இணையதளத்தில் சந்தைப்படுத்தப்படும்

    By பெங்களூரு,  |   Published on : 09th November 2013 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் வன உற்பத்திப்  பொருள்கள் இணையதளத்தில் சந்தைப்படுத்தப்படும் என்று, அந்த மாநில வனத் துறை அமைச்சர் ரமாநாத்ராய் தெரிவித்தார்.

    பெங்களூருவில் வெள்ளிக்கிழமை வனத் துறைக்கான இணையதள சேவையைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

    வனத் துறையில் பல்வேறு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை இணையதளத்தில் சந்தைப்படுத்துவதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும். வெட்டப்படும் மரங்களின் எடைகள் துல்லியமாக இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.

    இதனால், அவைகளை எங்கு கொண்டு சென்றாலும், எந்தவிதமான முறைகேடும் நடைபெறாது. இதேபோல, வன விலங்குகளின் எண்ணிக்கையும், நடமாட்டமும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில் வனத் துறை முதன்மைச் செயலாளர் சிவசைலம், வனப் பாதகாப்பு அதிகாரி தீபக் ஷர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai