சுடச்சுட

  

  "வேளாண் கண்காட்சியில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்'

  By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

  பெங்களூரு விவசாயப் பல்கலைக்கழகம் சார்பில், பெங்களூரு ஹெப்பாளில் அமைந்துள்ள காந்தி வேளாண் அறிவியல் மையத்தில் பன்னாட்டு வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்றது.

  கண்காட்சியில் புதிய வகை விதைகள், பயிர் முறைகள், தொழில்நுட்பங்கள், கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், உழவுத் தொழில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

  இந்தக் கண்காட்சி குறித்து பெங்களூரு விவசாயப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கே.நாராயண கெüடா கூறியது: பன்னாட்டு அளவில் கிடைக்கும் தொழில்நுட்பம், வேளாண் கருவிகளை கர்நாடக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தவே இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியின் மூலம் தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு, சூரிய ஒளி பம்ப்செட் பயன்பாடு, இயற்கை உரம் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம்.  இதேபோல, வேளாண் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில், ஒருங்கிணைந்த வேளாண்மை, பால் பண்ணை மேம்பாடு, இயற்கை உரம் தயாரிப்பு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. கண்காட்சியை காண விவசாயிகள் தவிர, ஆராய்ச்சியாளர்களும்  கலந்து கொண்டனர்  என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai